ஆசை மகள்கள் கேட்ட ஒரே கேள்வி, மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ டிரைவர்.!

ஏன் அப்பா குடிச்சுட்டு இப்படி ஒரு கொலையை செய்தாய் என்று மகள்கள் கேள்வி கேட்டதால் மனம் வெறுத்துப்போன ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த்.இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்திரிகா, இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரஜினி அளவுக்கு அதிகமான மது அருந்திவிட்டு துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே வரும்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து மிக வேகமாக சென்று தேவதாஸ் என்பவர் மீது மோதியது .இதில் தேவதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனால் பயந்து போன ரஜினிகாந்த் தப்ப முயன்றபோது அளவுக்கு அதிகமான குடிபோதையில் உள்ள அவரை போலீசார் பிடித்துள்ளனர்.

பின்னர் ரஜினியை ஆட்டோவுக்குரிய ஆவணங்களையும் டிரைவிங் லைசென்ஸ்யும் கொண்டுவருமாறு கூறி போக்குவரத்து துறை போலீசார் அவரை அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் ரஜினி வீட்டிற்கு வந்து நடந்த அனைத்தையும் கூறுகையில் அவரது மகள்கள், ஏன் அப்பா இப்படி குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டி,அவங்களை கொலை செய்தாய் என்று கேட்டுள்ளனர்.

மேலும், ரஜினிகாந்த்தின் மனைவியும் நீங்கள் ஜெயிலுக்குப்போய்விட்டால் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன் என்று கதறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ரஜினிகாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.