ஊருக்கு திரும்பிய கணவனுக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி…..

வெளிநாட்டில் கணவன் வேலை செய்து வந்த நிலையில் உள்ளூரில் இருந்த மனைவி வேறு நபருடன் ஓடிபோய்விட்டதால் மனமுடைந்த கணவன் நக்சலைட் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானாவை சேர்ந்தவர் ஜக்குலா பாபு (38). இவர் 2016-ல் துபாயில் வேலை செய்து வந்தார்.

இதையடுத்து அங்கிருந்து சொந்த ஊரில் வசிக்கும் மனைவிக்கு பணம் அனுப்பி வந்தார்.

இந்நிலையில் மனைவிக்கு உள்ளூரில் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த ஜக்குலா அதை ரகசியமாக கண்டுப்பிடிக்க ஊருக்கு திரும்பியுள்ளார்.

அப்போது ஜக்குலா அனுப்பிய பணத்துடன் அவர் மனைவி ஓடிபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடையந்த ஜக்குலா அதிர்ச்சியான முடிவை எடுத்தார்.

அதன்படி நக்சலைட் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இது குறித்து அறிந்த பொலிசார் ஜக்குலாவை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அவர் பொலிசாரிடம் வசமாக சிக்கி கொண்டார்.

ஜக்குலாவிடம் இருந்து அமெரிக்காவில் தயாரான துப்பாக்கி மற்றும் ரூ. 44,600 பணத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

ஜக்குலா மீது ஏற்கனவே கடந்த 2001 – 2008 ஆண்டு வரை சில வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ள நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.