ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்து.! 42 பேர் பரிதாப பலி.!

ஜிம்பாப்வே நாட்டின், மிட்லான்ட்ஸ் மாகாணத்திற்குட்பட்ட ஸ்விஷாவானே பகுதியில் இருந்து ஒரு பேருந்து, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் முசினா என்ற பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில், சுமார் 70 பேர் பயணம் மேற்கொண்டனர்.

புலாவயோ- பெய்ட்பிரிட்ஜ் சாலை வழியாக, நேற்றிரவு சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதாமாக, அந்த பேருந்து திடீரென்று தீ பற்றி எரிய ஆரம்பித்தது. ஓடும் பேருந்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய 42 பேர் பரிதாபமாக பலியாகினர். 20-க்கும் அதிகமானவர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த வாரம், இதே மாகாணத்தில் இருக்கும் ருசாப்பே என்னுமிடத்தில் இரண்டு பேருந்துகள் மோதிகொண்ட விபத்தில், 50 பேர் பரிதாபமாக பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.