இலங்கைக்குள் நேரடியாக களமிறங்கும் அமெரிக்கா?

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணுமாறு அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தத்தை பிரயோகித்துள்ளன.

இதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்க தயாராக இருப்பதாகவும் இந்நாடுகள் கூறியுள்ளன.

நேற்றைய தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான செயற்பாடுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடலின்போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் ஸ்திரமான ஆட்சி கேள்விக்குள்ளாகியிருப்பது, மக்கள் பிரதிநிதிகள் ஜனநாயகத்தை மதிக்காமல் நடந்துகொள்ளுவது போன்ற விடயங்கள் குறித்தும் இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி விரைந்து தீர்மானம் எடுத்து நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.