கஜா புயல் ஆய்வு மற்றும் நிவாரண பணிகளுக்கு கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வங்க கடலில் உருவான கஜா புயல் கடந்த 5 நாட்களாக தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வந்து நேற்று முன் தினம் காலையில் நாகை அருகே வேதாரண்யத்தில் கரையை கடந்தது. அப்போது நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தை 111 கி.மீ வேகத்தில் புயல் தாக்கியது. கஜா புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
கஜா புயலுக்கு 45 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 1.70 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டது. மேலும், 347 டிரான்ஸ்பர்மர்கள், 39,938 மின் கம்பங்கள், 3559 கி.மீ நீள மின் வடங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலுக்கு முன்பே 2,49,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். புயல் காரணாமாக 56,942 குடிசை வீடுகளுக்கும், 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், கஜா புயல் ஆய்வு மற்றும் நிவாரண பணிகளுக்கு கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்திற்கு செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விஜயபாஸ்கர், கருப்பணன், பாஸ்கரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.