பல ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாணத்தில் பூத்துள்ள அதிசயப் பூ!!

உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் எனக் கூறப்படும் கிடாரம் மலர் புத்தளம் பிரதேசத்தில் மலர்ந்துள்ளமை குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்திருந்தன.புத்தளம் பிரதேசத்தில் உள்ள கே.ஜீ.காந்தி என்ற பெண்ணின் வீடொன்றின் முற்றத்தில் இந்த மலர் பூத்துள்ளது.

அபூர்வ மலரைப் பார்க்க பிரதேச மக்கள் குறித்த வீட்டிற்கு படையெடுத்துச் சென்றிருந்தார்கள்.ஒரு அடி உயரத்தில் வளரும் இந்த மலரில் இருந்து துர்நாற்றம் வீசுகின்றது.இந்த மலர் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்திலும் இந்த அதிசயப் பூ பூத்திருக்கின்றமை  குறிப்பிடத்தக்கது.

யாழ் வலிகாமம் கிழக்கு ஊரெழுப் பிரதேசத்திலும் தோட்டம் ஒன்றில் கரணைக்கிழங்கு பூவாக பூத்துள்ள இந்த மலர் குறித்து எமது செய்திப்பிரிவிடம் விபரிக்கின்றார் குறித்த பூவின் உரிமையாளர்.

இந்த  அதிசயப் பூ குறித்து இப்போது தான் தகவல் வெளிவருவதால், குறித்த பூவை பார்ப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்துச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை.