டிசம்பர் 10க்குள் தமிழக அரசியலில் அரங்கேறும் அதிரடி மாற்றம்.!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, ஜெயலலிதா சமாதியில் பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தி அதிமுகவில் இரண்டாவது அணியை உருவாக்கினார்.

இதற்கு பிறகு சசிகலா தலைமையில் ஒரு அணியும், பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வந்தது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்தெடுக்கப்பட்ட பிறகு, அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பறிபோனது.

இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே சின்னம் வழங்கப்படும் என்று கூறியதையடுத்து இரு அணியினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சசிகலா குடும்பத்தை அதிமுக கட்சியில் இருந்து விலக்கிவைக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்க்கு சம்மதித்த எடப்பாடி தரப்பு முதலில் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்கி வைத்தது. பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை அமைத்து உத்தரவிட்டது.

இது வரையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நூற்றுக்கணக்கானவர்களிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளது. இறுதியாக அப்போலோ மருத்துவமனை தலைவர், துணை தலைவர், துணை முதல்வர் பன்னீர்செல்வம், லண்டன் மருத்துவர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

அடுத்த கட்டமாக சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருப்பதால் அவருக்கு முதலில் சிறை அதிகாரிகள் மூலம் சம்மன் அனுப்பப்படும்.

அதற்கு பிறகு பரோலில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையை வருகிற டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. எனவே விரைவில் சசிகலாவிடம் விசாரணை நடை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.