கொஞ்சம் டெல்டா மக்களை திரும்பி பாருங்கள்!

வங்க கடலில் உருவான கஜா புயல் கடந்த 5 நாட்களாக தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வந்து நேற்று முன் தினம் காலையில் நாகை அருகே வேதாரண்யத்தில் கரையை கடந்தது. அப்போது நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தை 111 கி.மீ வேகத்தில் புயல் தாக்கியது. கஜா புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

கஜா புயலுக்கு 45 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 1.70 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டது. மேலும், 347 டிரான்ஸ்பர்மர்கள், 39,938 மின் கம்பங்கள், 3559 கி.மீ நீள மின் வடங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலுக்கு முன்பே 2,49,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். புயல் காரணாமாக 56,942 குடிசை வீடுகளுக்கும், 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணம் சரியாக சென்றடையவில்லை என புகார் எழுந்துள்ளது. நிவாரணம் வழங்கும் சில இடத்திலும், ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே உணவு வழங்கப்படுவதாக தமிழக அரசு மீது குறை கூறி வருகின்றனர்.

புயக்கு முன் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் பாராட்டத்தக்கது தான். ஆனால், நிவாரணம் வழங்குவதில் அரசின் போக்கு சரி இல்லை. சரியான முறையில் நிவாரண பொருட்கள் மக்களிடம் சென்றடையவில்லை. இதனால் மக்கள் கொதித்தெழுந்து வருகின்றனர். பிரபல செய்தி தொலைக்காட்சிகளும், டெல்டா பகுதியில் நிலைமை சீரடைந்து விட்டதாக பொய்யான செய்திகளை மக்களிடம் பரப்பி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ஸ்டாலினையும் மக்கள் முற்றுகையிட்டு துரத்து அடித்தனர். அதே போல் அமைச்சர் ஓஎஸ் மணியன் மக்களுக்கு பயந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார்.

தமிழக அரசு பிரபல மீடியாக்களை பயன்படுத்தி பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது. நாகை, புதுக்கோட்டை மாவட்டம் முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது. அங்குள்ள மக்கள் தண்ணீர் கூட கிடைக்காமல் தவித்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்களே உடனே டெல்டா மக்களுக்கு உதவுங்கள். நாளைக்கு நமக்கும் அந்த நிலைமை வரலாம். கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளா வெள்ளத்திற்கு பல கோடி நிதி உதவி வழங்கி உதவி செய்தீர்கள். ஆனால் தற்போது டெல்டா பகுதியில் அதே நிலைமை தான் உள்ளது. உடனே அவர்களுக்கு உதவி செய்ய முன் வாருங்கள்.

சென்னை மக்களே நமக்கு சோறு போடும் விவசாயிகள் அங்கு ஒரு வேலை உணவில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவுங்கள்.