24 மணித்தியாலங்களில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தின் தென்திசையின் மத்தியில் தாழமுக்க பிரதேசம் வலுவடையும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை காணப்படுமென வளிமண்டளவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் முல்லைதீவு, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையிலான கடற்பிராந்தியங்களில் கடலுக்கு செல்வதை கடற்றொழிலாளர்கள் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கஜா புயலின் தாக்கம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளதுடன், யாழ். குடா நாட்டிலும் இதன் தாக்கம் அதிகமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.