அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒரு அற்புதமான பொருள் என்றால் அது கடலை மாவு தான்.
இந்த கடலை மாவு சில பொருட்களுடன் சேர்த்து சருமத்தில் பயன்படுத்தி வந்தால், அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் நீங்கி, சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
கடலை மாவை எப்படி பயன்படுத்த வேண்டும்?
- 1/2 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகிய அனைத்து பொருட்களையும் கலந்து சருமத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
- 1 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 2 டீஸ்பூன் க்ரீன் டீ ஆகிய இரண்டையும் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- 1/2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகிய இரண்டையும் சேர்த்து பேஸ்ட் செய்து அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைத்து, நீரில் கழுவ வேண்டும்.
- 1 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகிய இரண்டையும் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- 1 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 3 டீஸ்பூன் சீமைச்சாமந்தி டீ ஆகிய இரண்டையும் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- 1/2 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகிய அனைத்தையும் பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகிய அனைத்தையும் பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தேன் ஆகிய பொருட்களை ஒன்றாக கலந்து, அதை சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.