லண்டனில் ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள வீதியில், பெண் ஒருவரை மடக்கி பிடித்து ஆண் ஒருவர் சண்டையிடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
லண்டனின் பெக்ஹாம் பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள தெரு ஒன்றில் காவலாளி ஒருவர், இளம்பெண்ணின் கைகளை பின்னால் பிடித்துக்கொண்டு சண்டையிடும் வீடியோ காட்சி இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், பெண்னின் கைகளை பின் பக்கமாக கட்டிக்கொண்டு சண்டையிடும் காவலாளியிடம் இருந்து, அந்த பெண் தப்பிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.
இதனை பார்த்த பாதசாரி ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே இருந்தார்.
அப்போது அங்கிருந்த ஒரு பெண், அவளை விட்டு விடு, அவள் ஒரு பெண். உனக்கு அப்படி என்ன செய்துவிட்டாள் என கேள்வி எழுப்பினாள்.
உடனே அந்த காவலாளி, இவள் கடையில் இருந்த பொருள் ஒன்றினை திருடி விட்டாள். வேகமாக பொலிசாரை அழையுங்கள் என கெஞ்சினார்.
ஆனால் அந்த பிடிபட்டிருந்த பெண், “என்னை விட்டுவிடு நான் போகிறேன்” என கூறுகிறார்.
இதற்கிடையில் அந்த வீடியோவினை எடுத்துகொண்டிருந்த நபர், ஓ இவள் அப்படி என்ன திருடினாள் என கேள்வி எழுப்பினார்.
இந்த கடையில் இல்லை. வேறு ஒரு கடையில் திருடினாள். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? என காவலாளி கெஞ்சும் தொனியில் கேட்க, அதற்கு அந்த நபர், நான் உதவ முடியாது என கூறுகிறார்.
இதற்கிடையில் வீதியில் நடந்து செல்லும் பலரும் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டே கடந்து செல்கின்றனர்.
இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து மெட்ரோபொலிட்டன் பொலிஸ் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.