தமிழ்நாட்டில் சில ஆண்டுகளாக மருத்துவமனைகளில் நடக்கும் சில கொடுமைகளை நாம் அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு நடக்கும் அநீதிகளை தமிழ்நாடு அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை.
இந்தியாவில் அதிக அரசு மருத்துவமனைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு உள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளின் சுகாதாரத்தை பேணி காப்பதிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களாக மகளிா் வாா்டில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு 9 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிாிந்துள்ளாா். மூதாட்டியின் உறவினருக்கு அவர் இறந்தது தெரியாமல் போனதால் அந்த உடலை பிணவரைக்கு கொண்டுச் செல்லாமல் வாா்டிலேயே தரையில் வைத்துள்ளனா்.
இதற்கிடையில், மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்த பூனை ஒன்று மூதாட்டியின் உடலை கடித்து தின்றுள்ளது. இதனை கண்ட மக்கள் அந்த செயலை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனா். பின்னர் அவர்கள் மருத்துவர்களிடம் இது பற்றி கேள்வி கேட்டுள்ளனர். அப்போது மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது மட்டுமே எங்கள் வேலை, அதற்குப்பின் இது போன்ற சம்பவம் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியுள்ளனர். இதை கேட்டு ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மருத்துவர்கள் அவர்களை சமாதானம் செய்தபின் அந்த மூதாட்டியின் உடலை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டது. அந்த மூதாட்டியின் உடலை பூனை கடித்து தின்ற காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.