66 வயது முதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்!

இணையதளம் வாயிலாக இரு இதயங்கள் சந்தித்துக்கொள்வது தற்போது அதிகரித்துவிட்டது.

தங்களுடைய வாழ்க்கை துணையை இணையதளம் வாயிலாக சந்தித்து திருமண பந்தத்தில் இணையும் இந்த காலத்தில், அப்படியொரு இணையதளமே சில சமயங்களில் பல ஏமாற்றங்களையும் அளித்துவிடுகிறது.

66 வயதான முதியவர் தனது பணி ஓய்வு பெற்றபின் கிடைத்த பணத்தில் சந்தோஷமாய் வாழ்வதை விட்டுவிட்டு காதல் என்று நம்பி தன்னிடம் உள்ள லட்சக்கணக்கான பணத்தினை இழந்துள்ளார்.

Roy Twiggs என்ற 66 வயது நபர் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர், 22 வயது பெண்ணுடன் இணையதளம் வாயிலாக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.

ஒருவருக்கொருவர் சாட் செய்து கொண்டனர், நாளடைவில் இவர்கள் நெருக்கமானார்கள். அது காதலாக மாறியது. முதியவரும் அப்பெண் தன்னை காதலிக்கிறாள் என நம்பி, ஆசையாக இருந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் அப்பெண், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது எனக்கூறியுள்ளார். தனது காதலிதானே கேட்கிறாள் என கருதி, £100,000 பவுண்டினை ஒன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்துள்ளார்.

பணம் வாங்கிய ஆரம்பத்தில் நன்றாக பேசியபின்னர், கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சுயரூபத்தை காட்டியுள்ளார்.

இவருடன் பேசுவதை குறைத்துக்கொண்ட அப்பெண், பின்னர் நாளடைவில் இவருடனான தொடர்பை முற்றிலும் குறைத்துக்கொண்டார். அப்போதுதான் அந்த முதியவருக்கு தெரியவந்துள்ளது, காதல் எனும் போர்வையில் தான் ஏமாற்றப்பட்டுள்ளது.