நள்ளிரவில் நடந்த கோர விபத்து!

ஒடிசா மாநிலத்தில், ஆற்றுப்பாலத்தில் இருந்து தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 30 பயணிகளுடன் சென்ற பஸ் ஜகத்பூர் அருகிலுள்ள மகாநதி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஆற்றுப்பாலத்தில் இருந்து தலைகீழாக கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், 12 பேர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர். மேலும், 46 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கின்றது. இதையடுத்து, படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.