காதலர் தேவை என விளம்பரம் செய்த பிரித்தானிய இளம்பெண்: இறுதியில் என்ன நேர்ந்தது தெரியுமா?

பிரித்தானியாவில் ஆண்டுக்கு 60 ஆயிரம் பவுண்டுகள் தருவதாக கூறி காதலர் தேவையென விளம்பரம் செய்த இளம்பெண்ணுக்கு உலகம் எங்கிலும் இருந்து கோரிக்கை குவிந்துள்ளது.

பிரித்தானியரான ஜேன் பார்க் என்ற 23 வயது இளம்பெண்ணுக்கு யூரோமில்லியன் லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.

இதனையடுத்து டேட்டிங் செய்ய ஆண் தேவை என்றும் ஆண்டுக்கு 60 ஆயிரம் பவுண்டுகள் தருவதாகவும் அவர் விளம்பரம் செய்தார்.

இந்த நிலையில் உலகமெங்கிலும் இருந்து அவருக்கு கோரிக்கை குவிந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் எகிப்தில் இருந்து அதிக கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆயிரக்கணக்கில் கோரிக்கைகள் குவிந்துள்ளது மட்டுமின்றி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இருமடங்கு ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கென்யா நாட்டு இளைஞர் ஒருவர், ஜேன் பார்க் அறிவித்தது போன்று அந்த பணத்தை தருவார் என்றால் அவருடன் ஒவ்வொரு நொடியும் கூடவே இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர் ஒருவர், ஜேன் பார்க்கரை திருமணம் செய்து கொள்ள விருப்பமே ஆனால், அவரது பணத்தில் சிறிதளவும் எனக்கு வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

இந்தயர் ஒருவர், உங்களது மணம் எதுவும் எனக்கு தேவையில்லை, ஆனால் நாம் இருவரும் ஒரே மன நிலையில் இருப்பதாக படுகிறது. நாம் இருவரும் வாழ்க்கையில் நண்பர்களாக இணைந்தால் உண்மையில் புரிந்து நடந்து கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த காதல் கோரிக்கைகளுக்கு இதுவரை ஜேன் பார்க்கர் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.