தந்தையை காதலித்து திருமணம் செய்து கொண்ட மகள்???

பிரித்தானியாவில் மாற்றாந்தந்தையை மகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு இரட்டை குழந்தை உள்ளது.

சரா (28) என்ற இளம் பெண் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

சராவின் தாய் தனது முதல் கணவரை பிரிந்த நிலையில் டேவிட் 69) என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

அப்போது தான் சராவுடன் டேவிட்டுக்கு அறிமுகம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தந்தை மகள் என்பதை மீறி நண்பர்களாக பழகி வந்தனர்.

இது பின்னர் இருவருக்கும் இடையில் காதலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் சராவின் தாயை, டேவிட் பிரிந்துள்ளார்.

பின்னர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 2008-ஆம் ஆண்டு, சராவுக்கு 18 வயது இருக்கும் போது டேவிட் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.

விரைவில் சராவும், டேவிட்டும் சேர்ந்து தங்களின் பத்தாவது திருமண நாளை கொண்டாடவுள்ளனர். இது குறித்து சரா கூறுகையில், எங்கள் இருவரின் திருமணத்தை எங்கள் குடும்பத்தார் ஏற்கவில்லை.

இதனால் வீட்டை விட்டு வெளியேறி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்

நான் டேவிட்டுடன் மகிழ்ச்சியாக இருந்தாலும், 41 வயது வித்தியாசம் காரணமாக சில பிரச்சனைகளும் எங்களுக்கு உள்ளன என கூறியுள்ளார்.