இயற்கை முறையில் குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்!

ஒருவரது உடல் ஆரோக்கியத்துக்கு குடல் சுத்தமாக இருப்பது அவசியம். ஏனெனில் அப்பொழுது தான் உடலுக்கு தேவையான சத்துக்களை குடல் உறிஞ்சும்.

இல்லையென்றால் ஆரோக்கியமில்லாத உணவுகள் உறிஞ்சப்படாமல் குடலில் தங்கி தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

எனவே குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமான பாதை மற்றும் குடலில் உள்ள அழுக்குகள் வெளியேறி குடல் சுத்தமாகும்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது, இதிலுள்ள பெக்டின், நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேடுகள் உள்ளதாக குடலில் நீரை தேக்கி வைத்து குடலியக்கம் சீராக செயல்பட உதவிகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும், மக்னீசியமும் குடலை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது, எனவே தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.

அவகேடோ

அவகேடோ என்னும் வெண்ணெய் பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அடிக்கடி அவகோடா பழ மில்க் ஷேக் குடித்து வருவதும் குடலை சுத்தப்படுத்தும்.

தேன்

தினம் இரவு படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடித்து வந்தாலும் குடல் சுத்தமாகும்.மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.

தயிர்

உணவில் தயிர் அதிகம் சேர்த்து கொள்ளலாம், இதிலுள்ள நல்ல பக்டீரியாக்கள் உணவில் உள்ள சத்துக்களை குடல் எளிதில் உறிஞ்ச உதவுகிறது.