அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் பாகிஸ்தானை சேர்ந்த இளைஞரை அவர் ஊருக்கே சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் மரியா எஞ்சலோ (19). இவருக்கு பாகிஸ்தானை சேர்ந்த மோஹிசின் அலி (23) என்பவருடன் சமூகவலைதளம் மூலம் நட்பு எற்பட்டது.
இதன் பின்னர் இருவருக்குமான நட்பு நெருக்கமான நிலையில் மோஹிசின், மரியாவிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து காதலை ஏற்று கொண்ட மரியா, மோஹிசினை கரம்பிடிக்க பாகிஸ்தானுக்கு சென்றார்.
பின்னர் இஸ்லாம் மதத்துக்கு மாறிய மரியா மோஹிசினை திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே கடந்த வாரம் 41 வயதான அமெரிக்க பெண், 21 வயதான பாகிஸ்தான் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட செய்தி வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.