பிரான்சில் ஆண்கள் பாத்ரூமில் ரகசிய கமெராவை வைத்த நபருக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரான்சின் Normandy மாகாணத்தின் Calvados பகுதியின் Vire -ல் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் விவசாய வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் கிடைக்கும் கடை ஒன்று உள்ளது.
இந்த கடையின் 26 வயது உரிமையாளர் சமீபத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். ஏனெனில் இவர் தன்னுடைய கடையில் இருக்கும் ஆண்களுக்கான பாத்ரூமில் ரகசிய கமெரா ஒன்றை பொருத்தியுள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் சொன்ன காரணம் அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது.
அவர் தன் மனைவியுடன் அதிக நேரம் நெருக்கமாக இருக்க முடியாத காரணத்தினால், மற்றவர்களின் ஆண்மைக்கும், தன்னுடைய ஆண்மைக்கும் இருக்கும் வித்தியாசத்தை காண்பதற்காகவே இப்படி செய்ததாக கூறியுள்ளார்.
முழுவிசாரணைக்கு பின் நீதிபதி அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். தண்டனை கொடுக்கப்பட்ட நபர் குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை.