முல்லைத்தீவு நந்திக்கடல் நீர் வெட்டுவாய்க்கால் பகுதி இன்று உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.
சுமார் 15 கிலோமீற்றர் நீளத்தை கொண்ட நந்திக்கடல் ஏரி, மழை காலங்களில் நீர்மட்டம் உயர்வடைந்ததும் இயற்கையாகவே பெருங்கடல் நோக்கிச் செல்வது முன்னர் வழக்கமாக இருந்தது.இந்த நிலையில், பல வருடங்களின் பின் இயற்கையாகவே இன்று அதிகாலை உடைப்பெடுத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக முல்லைத்தீவில் தொடர்ந்த அடைமழையால் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், இன்று நந்திக்கடல் வெட்டுவாய்க்கால் பகுதியில் உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.