தந்தையின் கடி தாக்குதலுக்கு உள்ளான ஐந்து வயது மகன்!

யாழ்ப்பாணத்தில் தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான மகன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.கடி காயங்களுக்கு இலக்கான ஐந்து வயதுச் சிறுவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.போதை தலைக் கேறிய தந்தையே சிறுவனைக் கடித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவன் கை, முதுகு , முகம் எனப் பல இடங்களிலும் கடி காயங்களுக்கு இலக்காகியுள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசரணைகளி்ன் பின்னர் இன்று அவர் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை சிறுவனின் உடல்களில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது என்றும், தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.