பாரளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவின் டுவிட்டர் பதிவிற்கு இலங்கைக்கான கனடாவின் தூதுவர் காட்டமான பதிலடியை வழங்கியுள்ளார்
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கும் இடையிலான சந்திப்பு குறித்து நாமல்ராஜபக்ச டுவிட்டரில் பதிவு செய்த கருத்திற்கே இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சி ஜேவிபி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை மேற்கொள்வது சுவாரஸ்யமாக உள்ளது என தெரிவித்துள்ள நாமல்ராஜபக்ச இந்த கட்சிகள் தங்கள் மக்கள் மற்றும் சமூகத்தவர்களை சந்திப்பது குறித்து அதிக அக்கறை செலுத்தினால், தேர்தலிற்கான மக்களின் எதிர்பார்ப்பினை செவிமடுத்தால் இலங்கை நன்மையடையும் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள கனடாவின் உயர்ஸ்தானிகர் நீங்கள் உங்கள் பொதுஜன கட்சியின் பிரமுகர்கள் சிலர் யாரை சந்திக்கின்றனர் என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Interesting to see @officialunp JVP & TNA politicians meeting with the int. community. Perhaps if more effort was given toward meeting with the people & communities of #lka & paying heed to their hope for #elections, #SriLanka can finally achieve its fullest potential. #LetMeVote
— Namal Rajapaksa (@RajapaksaNamal) November 21, 2018