இன்று மனமொத்த தம்பதியராக வலம் வரும் பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான கேட்டும் 2007ஆம் ஆண்டு பிரிந்த செய்தி பத்திரிகைகளில் தீயாக பரவிய நிலையில், அதற்கு காரணம் கேட்டின் குடும்பப் பின்னணிதான் என்கிறார் நிபுணர் ஒருவர்.
சில மாதங்களுக்கு இருவரும் பிரிந்திருந்த நிலையில் அதற்கு காரணமாக அமைந்தது கேட்டின் குடும்ப பின்னணிதான் என தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஆதாரமாக அவர், எப்போதெல்லாம் கேட்டை பார்ப்பதுண்டோ அப்போதெல்லாம் வில்லியமுடைய நண்பர்கள் ‘கதவுகளை திறக்கலாம்’ என்று கிண்டலாக கூறுவதை முன்வைக்கிறார்.
அதாவது கேட்டின் தாய் ஆரம்பத்தில் ஒரு விமான பணிப்பெண்ணாக இருந்தவர். அவர் விமானத்தில் கூறுவதையே, கிண்டல் செய்யும் வகையில் அவ்வாறு கூறுவார்களாம் வில்லியமுடைய நண்பர்கள்.
இந்த விடயமும் வில்லியம் கேட் பிரிவில் ஒரு முக்கிய பங்கு வகித்ததாக அவர் தெரிவிக்கிறார்.
இதை ராஜ குடும்பத்தினர் மறுத்து வந்தாலும், அப்படி நடந்ததைக் குறித்து தன்னால் உறுதியாகக் கூற இயலும் என்கிறார் அந்த நிபுணர்.
கேட்டின் தாயான Carole, ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர்.
முதலில் அவர் ஒரு விமானப் பணிப்பெண்ணாக இருந்தாலும், பின்னர் தன் சொந்த முயற்சியால் சொந்த பிஸினஸ் துவக்கி பின்னர் கோடீஸ்வரியானவர்.
ஒரு காலகட்டத்தில் பிரிந்திருந்தாலும், அதை நினைவு கூறும்போதெல்லாம் எல்லாம் நன்மைக்காகவே நடந்ததாக பின்னாட்களில் வில்லியமும் கேட்டும் கூறுவதுண்டு.