பலரின் உயிரை வாங்கிய Grenfell Tower தீ விபத்து! இளைஞர் செய்த செயல்..??

லண்டனில் கடந்த ஆண்டு கிரீன்பில் டவர் தீ விபத்தில் தன்னுடைய குடும்பத்தினர் இறந்துவிட்டதாக கூறி சுமார் 1 லட்சம் பவுண்டிற்கு மேல் நிவாரண உதவி வாங்கிய நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் 27 மாடி அடுக்குகளைக் கொண்ட Grenfell Tower ஒன்று உள்ளது. இக்கட்டிடம் கடந்த 2017-ஆம் ஆண்டு கடுமையான தீ விபத்தில் சிக்கியது.

இதனால் இந்த விபத்தின் காரணமாக 72 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. லண்டனையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அந்த குடியிருப்பில் இருந்த பலரும் வீடு இல்லாமல் தவித்து வந்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணயுதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த குடியிருப்பில் 21-வது தளத்தில் இருந்த என்னுடைய குடும்பத்தினர் 5 பேர் இறந்துவிட்டதாக கூறி, Sharife Elouahabi என்ற இளைஞர் அரசின் நிவாரணயுதவியாக சுமார் 103,000 பவுண்ட் பெற்றுள்ளார்.

அந்த பணத்தை வைத்து ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார். ஹோட்டல்கள் என இன்ப வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இதனால் இவரின் நடவடிக்கை பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளான Grenfell Tower-ன் சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அந்த பகுதியில் தான் இவர் இருக்கிறாரா என்று அவரின் போன் சிக்னல்களையும் செக் செய்துள்ளனர்.

ஆனால் அங்கு அந்த நபர் அங்கு இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இதையடுத்து பொலிசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில் இந்த நபர் அதே கிங்ஸ்டன் பகுதியில் வேறொரு முகவரியில் வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதன் பின் இது தொடர்பான வழக்கு Isleworth Crown நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு பின் அந்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதே போன்று 13 பேர் இந்த தீ விபத்தில் தன்னுடைய குடும்பத்தினரும் சிக்கிவிட்டதாக கூறி மோசடி செய்துள்ளனதாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.