அவுஸ்திரேலியாவில் தனது சொந்த மகளை நரபலி கொடுத்த ஒரு கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை தனது ஒன்பது மாதக் குழந்தையை நரபலி கொடுத்த அந்த 48 வயது மனிதர், உடைகளைக் களைந்து அந்தக் குழந்தையின் உடலை கடலில் வீசியிருக்கிறார். பின்னர் திங்கட்கிழமை அந்த குழந்தையின் உயிரற்ற உடல் கரையொதுங்கியபோது கண்டுபிடிக்கப்பட்டது.
Gold Coastஇலிருந்து Jack Evans படகுத்துறை வரை பயணித்த அந்த குடும்பத்தினரை பொலிசார் CCTV கெமரா உதவியுடன் கண்டுபிடித்தனர்.
நரபலி கொடுப்பது குறித்து தான் அறிந்திருந்ததாக அந்த குழந்தையின் தாயாகிய 23 வயது பெண் ஒப்புக் கொண்டதையடுத்து அவள் மீது பொலிசார் குற்றம் சாட்டவில்லை.
அவள் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் Queenslandஇலுள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.
எதற்காக அந்த பச்சிளம் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை