கோவில்பட்டி அருகே கயத்தார் வடக்கு தெருவை சேர்ந்த வினோபாஜி என்பவரது வீட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1004 மதுபாட்டில்களை கயத்தார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வினோபாஜியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வினோபாஜி அதிமுக கயத்தார் ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.