லண்டனில் போலா பிளாஸ் என்னும் கடும் குளிர் அடிக்கவுள்ளது!

போலா பிளாஸ் என்று அழைக்கப்படும் கடும் குளிர் லண்டனையும் ஏனைய பிரித்தானியாவையும் தாக்கவுள்ளதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. கடும் உறை பனி மற்றும் பனிப் பொழிவு காணப்படும் என்றும். இதனால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கார் ஓடும் தமிழர்கள் ஜாக்கிரதையாக இருப்பதோடு குளிர்கால டயர்களை மாற்றுவதும். டீ ஐசர் போன்ற பொருட்களை வைத்திருப்பதும் நல்லது. மேலும் வீதிகளில் உறை பனி காணப்படுவதால் வாகன விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.