மேற்கு லண்டனில் அமைந்துள்ள Hubb சமூக சமையலறைக்கு வருகை தந்த பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் அங்கு பணியாற்றும் பெண்மணியை கட்டியணைத்து பாராட்டியுள்ளார்.
லண்டனில் Grenfell குடியிருப்பு பேரிடருக்கு பின்னர் அங்குள்ள மக்களின் பசிபோக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது Hubb சமூக சமையலறை.
சுமார் 200 பேருக்கான உணவு சமைக்கும் வகையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த சமையலறைக்கு மேகன் மெர்க்கல் வருகை தந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் பலமுறை இங்கு வருகை தந்துள்ள மேகன் மெர்க்கல், அங்குள்ள பதிவேட்டிலும் பாராட்டி குறிப்பெழுதுவதை வடிக்கையாக செய்து வருகிறார்.
இந்தமுறை ரகசியமாக வருகை தந்துள்ள மேகன், முக்கிய பொறுப்பாளரை கட்டியணைத்து பாராட்டும் தெரிவித்துள்ளார்.
பின்னர் திடீரென்று சமையலறைக்குள் நுழைந்த மேகன் மெர்க்கல் ஈராக்கிய உணவு ஒன்றை சமைக்கத் தவங்கியவர்களுக்கு உதவி செய்யவும் துவங்கினார்.
பெண்களால் மட்டும் நடத்தப்படும் குறித்த சமூக சமையலறையானது குடியிருப்பு அற்றவர்களுக்கும் இயலாத முதியவர்களுக்கும் இலவசமாக உணவளித்து வருகிறது.
மட்டுமின்றி ஆங்கில மொழியும் கணணியும் கற்றுத் தருகின்றனர். மேலும் இவர்கள் வெளியிட்டுள்ள சமையல் புத்தகமானது இதுவரை 40,000 பிரதிகள் விற்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கடந்த 7 வார காலத்தில் இவர்கள் £210,000 அளவுக்கு நிதி திரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.