காதலியை கொன்று சமைத்து சாப்பிட்ட இளைஞன்??

ரஷ்யாவில் காதலியை கொன்று சமைத்து சாப்பிட்ட இளைனருக்கு உச்சபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

ரஷ்யாவின் Valdai பகுதியில் குடியிருந்து வந்தவர் 45 வயதான ஓல்கா புடுனோவா. கடந்த மகளிர் தினத்தன்று அவரது குடியிருப்புக்கு சென்ற 23 வயது இளைஞர் டிமிட்ரி லுச்சின் அவருடன் விடுமுறை நாளை மது அருந்தி கொண்டாடியுள்ளார்.

இந்த நிலையில் போதை தலைக்கேறிய லுச்சின், மது போத்தலால் ஓல்காவை தலையை 25 முறை தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது உடல் பாகங்களை ஒவ்வொன்றாக வெட்டி அப்புறப்படுத்தியுள்ளார். மட்டுமின்றி ஓல்காவின் மூளையை தனியாக எடுத்து வறுத்து சாப்பிட்டுள்ளார். கூடவே அவரது ரத்தத்தையும் குடித்துள்ளார்.

ஓல்காவின் சடலத்தை வெட்டி சிதைக்கும் முன்னர் அவரது அடிவயிற்றில் பரத்தை எனவும் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த இளைஞர் இணையத்தில் பல முறை கொடூர கொலைகள் தொடர்பில் தேடியதும் தெரியவந்தது.

மட்டுமின்றி கொலைக்கு பின்னர் சாத்தான் பூஜை செய்ததாகவும், ஆனால் அவர் விரும்பியது போன்று எதுவும் நடைபெறவில்லை எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை முடிவடைந்த நிலையில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.