தோல்விக்கு காரணம் ரிஷப் பாண்ட்: கேப்டன் விராட் கோலி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றி விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தபோது, மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் இந்தியாவிற்கு 17 ஓவரில் 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து களமிங்கிய இந்திய அணியில், ரோகித் சர்மா (7), லோகேஷ் ராகுல் (13), விராட் கோலி (3) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியாவின் ரன்குவிப்பு தடைபட்டது. ஒருர்றம் விக்கெட் சரிந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக 42 பந்தில் 76 ரன்கள் குவித்து வெளியேறினார். இதன் பிறது இணைந்த ரிஷப் பந்த் – தினேஷ் கார்த்திக் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, கடைசி 10 பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைபட்டது. அப்போது ரிஷப் பந்த் ரிவர்ஸ் ஸ்விப் மூலம் ஆட்டமிழந்தார்.  தொடர்ந்து 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த கார்த்திக் ஆட்டமிழந்தார். 17 ஓவர்கள் முழுமையாக ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

”இது மிகவும் நெருக்கமாக வந்து தோற்ற போட்டி. இழுபறியாக சென்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருப்பார்கள். நாங்கள் சிறப்பான  பேட்டிங்கை தொடங்கினோம். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ரன் குவிப்பு மந்தமானது. இறுதியில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் களத்தில் இருக்கும்போது வெற்றி பெற முடியும் என்று நினைத்தோம்.

ஆனால் ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் மீண்டும் பின்தங்கிவிட்டோம். தொடக்க பேட்ஸ்மேன்களில் தவான் மிகவும் ஸ்டிராங்கான வீரர். இதுவரை டி20யில் சதம் அடிக்காவில்லை. ஆனால், அவரது ஆட்டம் உண்மையிலேயே அணிக்கு பலன் தருவதாக இருக்கும்” என்று கூறினார்.