பிரித்தானிய இளவரசர் ஹரி ஏர் ஆம்புலன்சில் வேலை செய்த போது, தன்னை மிகவும் கவலையடைய செய்த சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
லண்டன் பகுதில் பணியிடத்தில் ஏற்படும் மனநல அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 130 முதலாளிகளும், பார்வையாளர்களாக 750 பேரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
அப்போது உரையாற்றிய பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஏர் ஆம்புலன்சில் பணியாற்றிய போது தனக்கு இருந்த மனஅழுத்தம் பற்றி பேசினார்.
அதில், குழந்தைகள் சம்மந்தப்பட்ட பல அதிர்ச்சிகரமான வேலைகளை நான் செய்துள்ளேன். எனக்கு குழந்தைகள் பிறந்ததும், என்னுடைய வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு பற்றி சிந்தித்த போது அது என்னை விளிம்பிற்கு எடுத்து சென்றது.
அந்த ஒரு குடும்பத்தை பற்றிய சிந்தனைகள், நான் முன்பு ஒரு போதும் உணராத மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது என கூறினார்.
அந்த சம்பவம் பற்றிய முழுமையான தகவல்களை இளவரசர் வெளியிடவில்லை. ஆனால் அங்கு வேலை செய்ததால், தனக்கு மனஅழுத்தம் பற்றிய சிறந்த அனுபவம் கிடைத்ததாக தெரிவித்தார்.