மண்டையில் கத்தி குத்தப்பட்ட நிலையில் ஒரு இளைஞன் வைத்தியசாலைக்கு சென்று, “உங்களிடம் ஒரு மருத்துவர் free-யாக இல்லையா?” என்று கேட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சைலலிஸ்ட் ஷான் வெய்ன், 34, என்ற இளைஞனே தென்னாப்பிரிக்காவில் திகிலூட்டும் தாக்குதலில் தப்பிப்பிழைத்த அந்த அதிர்டசாலி.
ஸ்ட்ராண்டில் வேலை செய்ய மோட்டார் சைக்கிள் சென்ற இளைஞனை இரண்டு நபர்கள் தாக்கினர், அதில் ஒருவர் அவர் தலையில் கத்தியால் குத்தியுள்ளார்.
அந்த ஆறு – அங்குலம் கொண்ட மண்டையில் குத்தப்பட்ட கத்தியுடன் அவரது பைக்கை அடைய முயன்றார், அப்போது மீண்டும் அவர்கள் தாக்கியுள்ளனர், ஆனால் நம்பமுடியாதவாறு ஷான் மீண்டும் போராடி வியக்கத்தக்க வகையில் அவர் தனது பைக்கில் வைத்தியசாலைக்கு சென்று மருத்துவர் free-யாக இல்லையா? என்று கேட்டு வைத்தியசாலை நிர்வாகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் குறித்த இளைஞன்.