தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர??

இன்றைய ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் தங்களின் தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

முடி உதிர்வுக்கு உள்ள காரணங்களில் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பொடுகுத் தொல்லை ஆகியவை மிகவும் முக்கியமான காரணமாகும்.

மேலும் தலைமுடி அதிகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை நாட வேண்டும் என்பதில்லை. இயற்கையே நமக்கு பல விஷயங்களை தந்துள்ளது.

எண்ணெய் மசாஜ்

இந்த எண்ணெய் மசாஜை தலையில் செய்யும் போது அது நம் தலை முடி வேரை நல்ல பலமாக ஆக்கி, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.

இதை தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யலாம். ஒரு மணி நேரம் நன்றாக தலையை ஊறவிட்டு பின்னர் தலையை நீரை கொண்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைகிழங்கு ஜூஸ்

உருளைகிழங்கை நன்றாக கழுவி அதன் தோல்களை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி, அதை நன்றாக அரைத்து அதை தலைமுடிக்குள் ஊற்றி பொறுமையாக மசாஜ் செய்து பின்னர் தலையை நீரால் கழுவ வேண்டும்.

வெங்காய ஜூஸ்

வெங்காயத்தை நறுக்கி பின்னர் அதை அரைத்து சிறிது தண்ணீர் செய்து தலை முடியில் மசாஜ் செய்யலாம். 15 நிமிடங்கள் தலையை அப்படியே ஊர விட்டு பின்னர் தலைக்கு ஷாம்ப் போட்டு குளிக்கலாம்.

முட்டை

முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக அரைத்து 10 நிமிடத்துக்கு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இதை செய்வதின் மூலம் முடியின் நறுமணம் அதிகரித்து வளர்ச்சியும் கொடுக்கும்.

நறுமணமிக்க எண்ணெய்கள்

முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமானால், நறுமணமிக்க எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றைக் கொண்டு வாரம் ஒருமுறை முடியை மசாஜ் செய்ய வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல்

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறோமோ அது நம் தலை முடி வளர்ச்சிக்கு பெரிதும் கை கொடுக்கிறது.

உடற்பயிற்சி

சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில் தூங்குவதுடன் சரியான அளவுக்கு உடற்பயிற்சிகளை செய்தால் அது நம் தலை முடியின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி வளத்தை அதிகப்படுத்தும்.