இங்கிலாந்தின் டெர்பிஷையர் பகுதியில் மகனுடன் காணாமல் போன தாய் ஏரிப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் டெர்பிஷையர் பகுதியை சேர்ந்த 41 வயதான எம்மா சில்லெட், கடந்த செவ்வாய்கிழமை முதல் மாயமாகிவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வீட்டிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள, ஏரிப்பகுதியில் கார் ஒன்று தனியாக நிற்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சிறிது தூரத்திலே தாயும், மகனும் சடலமாக கிடப்பதை பார்த்துள்ளனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.