உலகம் இப்படித்தான் அழியும்! வெளிவந்த தகவல்…

பூமியானது 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி செய்த கதிர் ஒளி சக்தியை விட தற்போது குறைவாக தான் உற்பத்தி செய்கிறது, அதாவது சூரியக் கதிர் ஒளி சக்தியானது 50% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பூமியானது மெது மெதுவாக அழிந்து விடும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகளை கொண்ட குழு அண்மையில் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த ஆய்வில் மிக துல்லியமான தகவல்களை பெற உலகின் மிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது உலகம் முழுக்க மிக பிரமாண்டமான 7 தொலை நோக்கிகளை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த தொலைநோக்கிகளை அவுஸ்திரேலியா, அமெரிக்கா, சிலி மற்றும் உலகத்தின் வட்ட பாதை ஆகியவைகளுக்கு இடையே நிறுவப்பட்டுள்ளன.

அதாவது 2 லட்சத்திற்க்கும் மேலான பால்வெளி மண்டலங்களில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுகளின் முடிவில்,

உலகத்தின் அழிவு என்றால் உலகம் ஒட்டுமொத்தமாக அப்படியே அழிந்து விடும் என்று அர்த்தமில்லை. நட்சத்திரங்கள் மற்றும் ஒளி தரக்கூடிய இதர கிரகங்களின் ஒளி சக்தி குறையும்.

தற்போது கிடைக்கப்பெறும் எல்லா ஒளியும் இல்லாத நிலையில், உலகம் மிகவும் குளிர்மையாகவும், இருள் சூழ்ந்தும், தனித்து விடப்பட்டது போன்று இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

“உடனே உலகத்தின் அழிவிற்கு தயாராகி விடாதீர்கள் இது நடக்க ஒரு லட்சம் கோடி ஆண்டுகள் ஆகும், அதாவது ட்ரில்லியன் ஆண்டுகள் ஆகும்” என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.