பாரிய ஆபத்திலிருந்து கோத்தபாயவை காப்பாற்றும் மைத்திரி!

கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற பாரிய மோசடி ஒன்றிலிருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ காப்பாற்றப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோத்தபாயவினால், கதிர்காமம் மாணிக்க கங்கைக்கு அருகில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட மாளிக்கை தொடர்பில் குற்ற விசாரணை பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த விசாரணை நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு உயர் அதிகாரி ஒருவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவற்றினை விசாரிப்பதில் அர்த்தம் இல்லை எனவும், அதனை நிறுத்துமாறும் குறித்த அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

விசாரணையில் உள்ள குறித்த வீட்டிற்கு எவ்வித அரச அனுமதியும் வழங்கப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முதல் முறையாக 2010ஆம் ஆண்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் அந்த வீடு தன்னுடையதல்ல என கோதத்தபாய குறிப்பிட்டார். எப்படியிருப்பினும் அந்த வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் பட்டியல் மஹிந்தவின் பெயரில் உள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய இந்த விசாரணையில் இருந்து கோத்தபாய விடுவிக்கப்படவுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.