மைத்திரியின் அராஜகத்தால் இரு உயிர்கள் பலி? நாட்டில் இரத்தம் ஓடலாம்!

நாட்டில் மக்கள் ஆணை பெற்ற அரசாங்கம் ஒன்று இருக்கும்போது அதனை நிராகரித்து ஜனாதிபதி தனக்கு விருப்பமான பிரதமர் மற்றும் அமைச்சரவையை அமைத்தபோது மக்கள் இன்றுவரை பொறுமையுடன் செயற்பட்டு வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அராஜக நிலையால் இதுவரை 2 உயிர்கள் பலியாகியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால் எங்குபோய் நிற்கும் என்று தெரியாது. அதனால் இந்த பிரச்சினைக்கு முடிவு காணாவிட்டால் நாட்டில் இரத்தம் ஓடும் நிகழ்வுகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.