இ.போ.சபை பேருந்து மீது தாக்குதல்!

யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் மீது இடம்பெற்ற கல்வீச்சுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் எழுதுமட்டுவாள்ப் பகுதியில் வைத்து இன்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்தியா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி இதுவரையில் கண்டுப்பிடிக்கப்பட வில்லை எனவும், சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.