தீவிர சிகிச்சை பிரிவில் திருமணம் செய்துகொண்ட முதல் பெண்!

பிரித்தானியாவில் தீவிர சிகிச்சை பிரிவில் திருமணம் செய்துகொண்ட பெண், தன்னுடைய உயிரை காப்பாற்றிய செவிலியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த ஹேலி கிளார்க் (30) என்ற பெண் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததும், ரத்தத்தில் கொடிய விஷத்தை கொண்ட கிரோன் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதன் வீரியம் அதிகரித்ததை அடுத்து 2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், வேகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் மூளை பகுதி அதிகமாகா சேதமடைந்துள்ளதால் காப்பாற்றுவது கடினம் என கூறியுள்ளனர்.

அதன் பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து 2 வாரங்கள் கோமாவில் இருந்துள்ளார். 6 வாரங்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த கிளார்க்கிற்கு, தீவிர கண்காணிப்பு பிரிவில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.

மார்ச் மாதம் 2014ம் ஆண்டு தன்னுடைய சிறு வயது காதலன் டேவிட்டை ஹேலி திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் குணமடைந்து தன்னுடைய இரண்டு மகள்களுடன் மிகவும் சந்தோசமாக வாழக்கையை கழித்து வரும் ஹேலி, தன்னுடைய இருண்ட நாட்களில் உடனிருந்து கவனித்த செவிலியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 4 வருடங்களுக்கு பிறகு அவர்களை சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து என்ன நடந்தது என்பதே எனக்கு தெரியாது. என்னை முழுவதுமாக கவனித்துக்கொண்டு திருமணத்திற்கு உதவியர்வர்கள் இந்த 4 செவிலியர்கள் தான் என ஹேலி கூறியுள்ளார்.

கிரோன் நோய் எந்த காரணத்தால் வருகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் நோயினால் அரித்தெடுக்கடும் உடல்பாகங்களை அறுவை சிகிச்சையின் மூலம் குறைக்க அல்லது கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.