லண்டனில் 72 பேரை பலி கொண்ட கட்டிட தீ விபத்தில், இறக்கு கடைசி நிமிடம் வரை பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களை காப்பாற்ற ஹெலிகாப்டர் வரும் என நம்பியிருந்ததாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள சான்றுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
லண்டனில் உள்ள கிரென்ஃபால் டவர் குடியிருப்பாளர்கள் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.
லண்டன் முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், ஹசிம் கெடிர் (44), அவரது மனைவி நூரா ஜெமால் (35), மகள் ஃபிர்ஹெர்ட்ஸ் ஹாஷிம் (12), மகன்கள் யஹியா ஹாஷிம் (13) மற்றும் யாக் ஹசிம் (6) உட்பட 72 பேர் பரிதாபமாக உடல்கருகி பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பான சான்றுகளை இன்று தீயணைப்பு துறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். அதில், தீயினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பயத்தில் 40க்கும் அதிகமான முறை தீயணைப்பு துறையினருக்கு போன் செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர், எங்களை காப்பற்ற ஹெலிகாப்டர் அல்லது ஏதேனும் வாகனம் வருமா? நாங்கள் இங்கு சிக்கிக்கொண்டுள்ளோம் என கூறியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த, லண்டன் தீ கட்டுப்பாட்டு அறை அதிகாரி கிறிஸ்டின் ஹவ்ஸன், இங்கு ஒரு ஹெலிகாப்டர் தான் உள்ளது. தீயணைப்பு வீரர்கள் இங்கிருந்து கிளம்பிவிட்டனர். அவர்கள் வரும்போது முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
தீயில் சிக்கியவர்கள் இதனை நம்பி, ஹெலிகாப்டர் நிச்சயம் நம்மை காப்பற்ற வரும் என எதிர்பார்த்திருந்துள்ளனர்.
இதுகுறித்து கிறிஸ்டினிடம் கேள்வி எழுப்புகையில், நான் அந்த மக்கள் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள் என நினைத்து தான் நம்பிக்கை கொடுத்தேன் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 14-வது மாடியில் மகனுடன் தீயில் சிக்கிக்கொண்ட 32 வயதான ஜைனப் டீன் என்ற பெண் ஒருவர் பேசிய இறுதி வார்த்தைகளும் விசாரணையில் வெளிவந்துள்ளது.
யுவோனே ஆடம்ஸ் என்ற அதிகாரியிடம் பேசிய அந்த பெண், நான் மாடியிலிருந்து குதித்து விடலாமா என நினைக்கிறன். இங்கு தீ வேகமாக பரவி வருகிறது. எங்களை காப்பற்ற வருவீர்களா? என கேட்டுள்ளார்.
இதேபோன்று போன் செய்த ஸினாய் என்ற பெண், நான் என்னுடைய மகனுடன் இருக்கிறேன். எங்களை காப்பாற்ற வருகிறீர்களா என கேட்டுள்ளார்.
அப்போது பின் பக்கத்தில் சிறுவன் அழுதுகொண்டிருந்த சத்தம் கேட்டுள்ளது. அடுத்த அரைமணி நேரத்தில் அந்த சத்தம் நின்றுவிட்டது. என்னவாயிற்று என கேட்டதற்கு, என்னுடைய மகன் இறந்துவிட்டான். நானும் என்னுடைய மகனுடன் செல்ல போகிறேன் என ஸினாய் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதுபோன்று அன்று இரவு மட்டும் 40 பேர் போன் செய்து கதறியுள்ளதாக அதிகாரிகள் சான்றுகளை வெளியிட்டுள்ளனர்.