பிரபல திரைப்பட நடிகர் ரோஜா மலிவு விலை உணவகத்தை துவங்கி வைத்து 4 ரூபாய்க்கு சாப்பாடு போடுகிறார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் 1990-களில் முன்னணி நாயாகியாக வலம் வந்தவர் தான் ரோஜா. சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்த இவர், கடந்த 1999-ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார்.
அதன் பின் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் இருக்கும் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். இதைத் தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் மகளிர் அணி தலைவியாகவும் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் ரோஜா தன் பகுதியில் மக்கள் பசியால் கஷடப்படக்கூடாது, என்பதற்காக தனது தொகுதியில் மலிவு விலை உணவகத்தை துவங்கி இருக்கிறார்.
இதில் 4 ரூபாய்க்கு சாப்பாடு போடுகிறார். இதற்கு ஒய்.எஸ்.ஆர் அண்ணா உணவகம் என்று பெயரிட்டு உள்ளார். நகரியில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் தினமும் வாகனத்தில் தலா 500 பேருக்கு காலை உணவு, மற்றும் மதிய சாப்பாடு தயார் செய்து கொண்டு போய் விற்கிறார்.
நகரி பஸ் நிலையத்திலும் இதே விலையில் காலை மதியம் உணவு வழங்குகிறார். ரோஜாவைப்போல் மற்ற எம்.எல்.ஏக்களும் இதே போல் மலிவு விலையில் உணவு வழங்க முன்வர வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ரோஜா கூறுகையில், மக்கள் பசியால் கஷ்டப்பட கூடாது என்பதற்காகவே 4 ரூபாய் உணவகத்தை திறந்துள்ளேன். தொகுதி முழுவதும் இந்த உணவகத்தை திறக்க ஆசை என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை ரோஜாவின் இந்த செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.