பேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.
அத்தகைய பேரிச்சம்பழத்தை 14 நாட்கள் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால், உடலின் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானம், வாயுத் தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
- பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக உள்ளதால், அது சிறந்த ஒரு வலி நிவாரணியாகவும், கை, கால் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.
- பேரிச்சம்பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
- நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் அதிகரிக்க தினமும் இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
- பேரிச்சம்பழத்தில் இருக்கும் விட்டமின் B6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவித்து, ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதல் போன்ற திறனை அதிகரிக்கச் செய்கிறது.
- கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால், வலி உண்டாகாமல் சுகப்பிரசவம் ஏற்படவும், பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
- மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
- பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.