அந்தமானில் கொல்லப்பட்ட அமெரிக்கர் தொடர்பில் சில புதிய தகவல்கள்!

அந்தமான் தீவுகளில் கொல்லப்பட்ட அமெரிக்க சுற்றுலாப்பயணிக்காக அவர் வழக்கமாக தங்கும் அவரது ராசியான அறையான அறை எண் 121 காத்திருப்பதாக அந்த ஹோட்டலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 17ஆம் திகதி காலை, வட செண்டினல் தீவுவாசிகள் சிலர் ஒரு மனிதரின் உடலை கடற்கரையில் புதைத்ததைக் கண்டதாக, கொல்லப்பட்டதாக கருதப்படும் John Allen Chauவை சட்ட விரோதமாக அத்தீவுக்கு அழைத்துச் சென்ற மீனவர்கள் தெரிவித்துள்ளது, செண்டினல் தீவுக்கு சென்ற John என்ன ஆனார், உண்மையில் அவர் கொல்லப்பட்டாரா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இருக்கும் என கருதப்படுகிறது.

மறுபக்கத்தில் வழக்கமாக போர்ட் பிளேரில் John தங்கும் Lalaji Bay View ஹோட்டலில் அவரது ராசியான அறையான அறை எண் 121இல் அவர் எடுத்த புகைப்படங்களைக் கொண்ட ஒரு காலண்டரும், அவரது இனிமையான நினைவுகளும் கூடவே மயான அமைதியும் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

அவர் எப்போதுமே இந்த அறையைத்தான் கேட்பார், அவருக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது என்று அவர் கூறுவதுண்டு.

நாங்கள் எப்போதும் பேசிக்கொள்வதுண்டு என்றாலும், இப்படி ஒரு செயலைச் செய்யப்போவதாக அவர் எங்களிடம் கூறியதேயில்லை, அதாவது செண்டினல் தீவுக்கு போகப்போவதை’ என்கிறார் ஹோட்டலின் உரிமையாளரான Nirman Lal (34).

நவம்பர் 19 அன்று பொலிசாரிடம் இருந்து எனக்கு ஒரு போன்கால் வந்தது.அவர்கள் Johnஐக் குறித்து விசாரித்தார்கள். மறுநாள் காலையில் நான் வாக்கிங் செல்லும்போது அதிகாரிகள் அவர் இறந்து விட்டதாகக் கூறினார்கள், என்னால் அதை நம்ப முடியவில்லை என்கிறார் அவர்.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி John முதலில் அந்த ஹோட்டலுக்கு வந்ததாகத் தெரிவிக்கும் ஹோட்டல் ஊழியர்கள், அவர் தொடர்ந்து தங்கள் ஹோட்டலுக்கு வரத்தொடங்கியதாகவும், இம்முறை அக்டோபர் மாதம் 16ஆம் திகதி வந்தவர், இரண்டு நாட்கள் தங்கி விட்டு சென்று விட்டதாகவும், அப்போதுதான் அவரைக் கடைசியாக பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.