குழந்தைகளை கொன்று நரமாமிசம் சாப்பிட்ட பெண்கள்? விரைந்து சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகளை கடத்திச் சென்று, அவர்களை கொலை செய்து நரமாமிசம் செய்து சமைத்து சாப்பிடுவதாக பொலிசாருக்கு தகவல் வந்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

டெல்லியில் இருக்கும் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வியாழக்கிழமை காலை 6.57 மணி முதல் 7.38 மணி வரையிலான 41 நிமிடங்களில் அடுத்தடுத்து 5 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

அதில், மேற்கு டெல்லியில், துவாரகா காக்ரோலா பகுதியில் 2 தான்சானியா பெண்களுடன் சிலர் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் அங்கு பரபரப்பாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

அதன் பின் மீண்டும் 7.40 மணிக்கு வந்த அழைப்பில், பெண் ஒருவர் 16 வயதான எனது மகனை நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் கடத்திக்கொண்டு போய் விட்டார்கள் என்று புகார் கூறியுள்ளார்.

துவாரகா பகுதியில் தான்சானியா, நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கிற பகுதியில் இருந்து தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்ததால், அசம்பாவிதம் ஏதேனும் நடந்திருக்குமோ என்று பொலிசார் அங்கு உடனடியாக விரைந்தனர்.

அப்போது அங்கு, தான்சானியா பெண்களின் வீடுகள் முன்பாக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். அந்த பெண்கள், ஒரு குழந்தையைக் கொன்று, அதன் மாமிசத்தை சமைத்து சாப்பிட்டு விட்டதாக அவர்கள் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.

இதனால் பொலிசார் அந்த இரண்டு பெண்களையும் மீட்டனர்.

இதைத் தொடர்ந்து 16 வயதான சிறுவனை கடத்திக்கொண்டு போய்விட்டதாக கூறப்பட்ட நைஜீரியா நாட்டினர் இருவரும் பொதுமக்கள் தாக்கி விடுவார்களோ என்ற பயத்தில் கதவைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் தூங்கியுள்ளனர்.

அவர்களையும் பொலிசார் பத்திரமாக மீட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் அவர்கள் குழந்தைகளை கடத்திக்கொண்டுபோய் கொன்று நர மாமிசம் சமைத்து சாப்பிடுவதாக புகார் கூறுவது வெறும் புரளி என்பதை அறித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பொலிசார் கட்டுப்பாட்டு அறைக்கு 6-வதாக வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய பெண், தனது 16 வயது மகனை நைஜீரியா நாட்டினர் கடத்திக்கொண்டு போய் விட்டதாக கூறியதால், அந்த பெண்ணை பொலிசார் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் அந்த பெண்ணின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அந்த பெண்ணின் புகார் குறித்து பொலிசார் விசாரணை நடத்தியபோது, அதுவும் பொய்த்தகவல்தான் என தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, துவாரகா பகுதியில் வசிக்கின்ற தான்சானியா, நைஜீரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள், குழந்தைகளை கடத்திக்கொண்டு போய் கொன்று நரமாமிசம் சமைத்து சாப்பிடுவதாக வந்த தகவல்கள் வெறும் புரளி என்பது தெரிய வந்திருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.