நாடாளுமன்றில் பெரும்பான்மை கிடைத்து விட்டது! மட்டற்ற மகிழ்ச்சியில் மைத்திரி

நேற்று நாடாளுமன்றத்தில் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வாக்கெடுப்பு மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும்பான்மை இல்லை எனவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே நாடாளுமன்றத்தினுள் பெரும்பான்மை உள்ளமை குறித்தும் தான் மகிழ்ச்சியடையவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தெரிவு குழு உறுப்பினர்களுக்கான வாக்கெடுப்பின் போது, ஆதரவாக 121 வாக்குகள் கிடைத்துள்ளன.

அதில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அந்த இரண்டு கட்சிகளும் இல்லை என்றால் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 101 ஆசனங்கள் மாத்திரமே உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாடாளுமன்றத்தினுள் 103 ஆசனங்கள் உள்ளதாக வாக்கெடுப்பில் உறுதியாகியுள்ளதாக ஜனாதிபதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும் நாடாளுமன்றில் பெரும்பான்மை நிரூபிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.