வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய சின்மயி இன்று செய்யப் போகும் மிகப்பெரிய செயல்??

பிரபல பாடகியான சின்மயில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டவதற்கு இன்று பாடல் கச்சேரி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரபல பாடகியான சின்மயி சமீபத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமின்றி மீடூ மூலம் பலரும் சின்மயிக்கு வைரமுத்துவால் சந்தித்த இன்னல்கள் குறித்து தெரிவித்தனர்.

அதை சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து தென்னிந்திய திரையுலக பெண்கள் மையம் சார்பில், லீனா மணிமேகலை, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து செய்தியாளர் சந்திப்பில் சின்மயி பங்கேற்றார்.

அப்போது அவர் சிவப்பு வண்ண ஸ்லீவ் லெஸ் மற்றும் நெக்-லெஸ் டீசர்ட் அணிந்திருந்தார். கழுத்தை ஒட்டி இரு பட்டைகள் தெரியும் வண்ணம் அவரது ஆடை இருந்தது.

இப்படி பலர் மீது புகார் கூறும் சின்மயி ஆடை அணிந்திருக்கும் ஸ்டைலை பாருங்கள் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் அவரை விமர்சித்தனர்.

இந்நிலையில் கஜா புயல் காரணமாக தமிழகத்தில் இருக்கும் சில மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சின்மயி கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் நிதி திரட்ட ஒரு பாடல் கச்சேரி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி இன்று 7 . 30 மணிக்குசென்னையில் இருக்கும் Ramada plaza-வில் நடைபெற உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சின்மயின் இந்த செயலைக் கண்டு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.