வெளிநாட்டவர்களை குறி வைக்கும் மஹிந்த!

வெளிநாட்டவர்களை அதிகளவில் இலங்கைக்கு வர வைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றரை வருடங்களுக்குள் சுற்றுலா துறைக்கு ஏற்பட்ட பின்னடைவை சரி செய்து, பொருளாதாரத்தினை அதிகரிக்க உதவும் வகையில் சுற்றுலா துறையை மாற்றுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறையில், ஈடுபடும் துறையினர் மற்றும் வர்த்தகர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மந்தமான பிரச்சார நடவடிக்கை காரணமாக சுற்றுலாத் துறையில் வீழ்ச்சி மற்றும் அழுத்தம் ஏற்பட்டதாக மஹிந்தவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய வெளிநாட்டவர்களிடையே இலங்கை தொடர்பில் ஈர்ப்பினை ஏற்படுத்தும் வகையில் பிரச்சார நடவடிக்கை ஒன்று முன்னெடுக்குமாறு பிரதமர், அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மீண்டும் முன்னெடுக்கப்படும் என மஹிந்த உறுதியளித்துள்ளார்.