அண்ணன் – தம்பியை பிரித்த மனைவிகள்?

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய அண்ணனை விட்டு பிரிந்து, கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வெளியேற, மனைவிகள் இருவருக்கும் ஒத்துப்போகாததே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி (34) தன்னுடைய கர்ப்பிணி மனைவி மேகன் (37) உடன் கென்சிங்டன் அரண்மனையிலிருந்து வெளியேறி தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஃபிரோமோர் ஹவுஸிற்கு செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனை அரண்மனை நிர்வாகமும் உறுதி செய்து அறிக்கை வெளியிட்டது.

வில்லியம் கொடுத்த அதிக அழுத்தத்தின் காரணமாகவே, ஹரி தன்னுடைய மனைவியுடன் அரண்மனையிலிருந்து வெளியேறுவதாக, அரண்மனை வட்டாரங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டு வந்தன.

21 அறைகளை கொண்ட கென்சிங்டன் அரண்மனையில், வில்லியம் – கேட் தம்பதியினரின் அறைக்கு அடுத்து தான் ஹரி – மெர்க்கல் தம்பதியினரின் அறை உள்ளது.

தங்களுக்கு அந்த இடத்தில் இருக்க பிடிக்கவில்லை என ஹரி நினைப்பதாவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஹரி அரண்மனையிலிருந்து வெளியேற இளவரசர்கள் இருவரின் மனைவிகள் தான் காரணம் என வில்லியமின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், கேட் மற்றும் மேகன் ஆகியோர் மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்கள் இணைந்திருக்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பல்வேறு பரபரப்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அரண்மனையில் இருந்து வெளியேறுவது பற்றி சகோதரர்கள் இருவரும் ஏற்கனவே நேரில் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

மெர்க்கலின் திருமணம் முடிந்ததிலிருந்தே அவருடைய நடவடிக்கை சரியில்லை என ராணியும், இளவரசர் ஹரியிடம் கூறியுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.