பூட்டிய வீட்டில் கிடந்த 3 சடலங்கள்!

ஆந்திராவில் பூட்டிய வீட்டினுள் 3 பேர் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பலாப்பூர் பகுதியில் ஹனுமந்து (30) என்பவரின் வீடு பூட்டிய நிலையில் நீண்ட நேரமாக கிடந்துள்ளது.

இதனை பார்த்த அவருடைய சகோதரி கதவை தட்டியுள்ளார். ஆனால் யாரும் திறக்காததால் சந்தேகமடைந்து வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார்.

அங்கு ஹனுமந்து, தன்னுடைய 9 மாத குழந்தை மற்றும் 26 வயது மனைவி சந்திரகலாவுடன் தற்கொலை செய்துகொண்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மூவரின் உடலையும் கைப்பற்றி உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், ஹனுமந்த்திற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சுஜாதாவுடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுஜாதா வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொல்வதாக மிரட்டி சென்றுள்ளார்.

இதனை நினைத்து பயந்து போன ஹனுமந்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் சுஜாதாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.