புது மனைவியுடன் தங்கவைத்து சித்ரவதை: பெண் மருத்துவரின் புகார்!

மும்பையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தனது கணவர் தன்னை கொடுமைபடுத்துவதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இருவரும் ஒரே மருத்துவமனையில் பணியாற்றி வந்தபோது காதல்வயப்பட்டு 2005 ஆம் ஆண்டு திருணம் செய்துகொண்டனர்.

இந்த மதத்தை சேர்ந்த இவர், தனது கணவருக்காக முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரில், என்னை தொடர்ந்து பணம் கேட்டு என் கணவர் சித்ரவதை செய்கிறார். மேலும் பல விவகாரங்களில் தொடர்ந்து தன்னைத் துன்புறுத்தி வந்ததோடு, இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார்.

கருத்தரித்த நிலையிலும் உள்ளாட்சி தேர்தலில் நிற்க என்னை வற்புறுத்தினார், ஆனால் நான் தேர்தலில் தோல்வியுற்றேன்.

இன்னொரு திருமணமும் செய்து கொண்டுள்ளார். அந்தப் புது மனைவியுடன் என்னை தங்க வைத்து சித்ரவதை செய்கிறார் என புகார் கூறியுள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.